கொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கையின் அழகுராணிப் போட்டியில் திருமதி ஸ்ரீ லங்காவாக மகுடம் சூட்டப்பட்ட புஷ்பிகா அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தான் வேட்பு மனு கோரியிருந்ததாக புஷ்பிகா டி சில்வா தெரிவித்தார்.
இருப்பினும், தனக்கு வேட்பு மனு கிடைக்கவில்லையென்றும், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் கொழும்பு – தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற திருமதி ஸ்ரீலங்கா போட்டியில் கலந்து கொண்ட புஷ்பிகா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் அதற்கான தகுதி இழந்த நிலையில் மீண்டும் திருமதி ஸ்ரீலங்காவாக மகுடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது