Tuesday, January 25, 2022

அரசியல் சக்தியை வலுப்படுத்த நடத்தப்பட்டதே ஈஸ்டர் தாக்குதல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மத தீவிரவாதத்தால் நடத்தப்படவில்லை. மாற்றமாக அரசியல் சக்தியை வலுப்படுத்துவதற்காக தூண்டப்பட்டதே இந்த தாக்குதல் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பொரளை கனத்தை மயாத்தில் பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை ஆசீர்வதித்து திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எங்கள் சகோதரர்கள் மத தீவிரவாதத்தால் தாக்கப்படவில்லை. அரசியல் சக்தியை வலுப்படுத்த மத தீவிரவாதம் பயன்படுத்தப்பட்டது .
“இந்த தாக்குதலில் நாம் காண்பது மத தீவிரவாதம் அல்லஇ ஆனால் சில குழுக்கள் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயன்றதன் விளைவாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles