Thursday, January 20, 2022

அரச ஊழியர்களுக்கு கொழும்பில் நிரந்தர வீடு

வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் அரச ஊழியர்களுக்கு கொழும்பில் நிரந்தர வீட்டைப் பெறும் கனவு நனவாகவுள்ளமை அனைவருக்கும் மகிழ்ச்சியான விடயமாகும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரச ஊழியர்களுக்கு “பொரளை அரச ஊழியர் வீடமைப்புத்திட்டம்” அங்குரார்ப்பண நிகழ்வு மார்ச் மாதம் 5ஆம் திகதி இடம்பெற உள்ளது.
2014ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வீட்டுத் திட்டத்தில் சுமார் 608 வீடுகள் காணப்படுவதுடன் தற்போது அனைத்து வீடுகளும் அரச ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
25 மாடிகள் கொண்ட இந்த வீட்டுத்திட்டத்தில் 3அறைகள் கொண்ட 304 வீடுகளும் 2 அறைகள் கொண்ட 304 வீடுகளும் காணப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles