அரச நிறுவனங்களில் பணியாற்றும் சகல அரச ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் பணிக்கு சமூகம் தந்தால் போதுமானதென அரச பணிகள், மாகாண சபைகள் அமைச்சு இன்று சுற்றறிக்கை வெளியிட்டது.
கொவிட் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சேவை இடங்களில் இடைவெளி, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. இரத்னசிறியின் கையொப்படம் இடப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில் அரச ஊழியர்கள் மாதத்தில் 8 நாட்கள் மாத்திரமே பணிக்கு சமூகமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் நிறுவனத்தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவர்களுக்கான பணிகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
சில சந்தர்ப்பங்களில் மூன்று நாட்கள் வேலைக்கு சமூகம் தரவேண்டி ஏற்பட்டால் நிறுவனத் தலைவருக்கு அதற்கான சகல அதிகாரங்களும் வழக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் வேலைக்கு சமூகம் தரும்படி அறிவித்தால் அந்நாட்களில் கட்டாயமாக பணிக்கு வரவேண்டுமெனவும் அவ்வாறு வருகை தராவிட்டால் அவரது தனிப்பட்ட லீவு நாட்களில் இருந்து அந்த நாளுக்கான லீவு குறைப்பு செய்யப்படும். எவ்வாறாயினும் வைத்திய மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் பணிக்கு சமூகம் தர முடியாவிட்டால் சாதாரண நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.