“ஆணைக்குழுவின் பரிந்துறைகளில் நம்பிக்கையில்லை” கத்தோலிக்க மக்களுக்கு கறுப்பு ஞாயிறு

0
83

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் திருப்தியடைய முடியாது என்பதை முன்னிறுத்தி எதிர்வரும் 7ஆம் திகதி கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்குமாறு கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்தார்.
கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற பேராயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து விசேட பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளும்படியும் பேராயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கை பலதரப்பினராலும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆணைக்குழுவின் மீது எவருக்கும் நம்பிக்கையில்லை. கட்சிகள் அனைத்தும் இதனை நிராகரித்துள்ளன. அனைத்து மத அமைப்புகளும் நிராகரித்துள்ளன. இந்தத் தாக்குதலை நடத்தியது யார்? இதன் பிரதான சூத்திரதாரி யார்? இதற்கு யார் நிதி உதவி செய்தது? எதிர்கால திட்டம் என்ன என்பது தொடர்பாக கண்டறிய வேண்டியுள்ளது. எனினும், முன்னாள் ஜனாதிபதி, பூஜித ஜயசுந்தர, ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் ஆகியோரே குண்டுத் தாக்குதலை செய்துள்ளார்கள். எதிர்பார்த்த எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here