Monday, July 4, 2022

இபோ சபைக்கு நிரந்தர ஊழியர்கள் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையில் 5 வருடத்துக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற போக்குவரத்து தொடர்பாக அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மே மாதத்தில் சாரதி ஆலோசகர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான பரீட்சையை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடத்திற்காக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles