ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இணையவழி முறைமையில் ஜெனீவாவில் நடைபெற்றது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.