இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக்கூடிய நிலைமை இல்லையெனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்க முடியுமென வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என அமைச்சரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படாது. மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையினால் தனிப்பட்ட ரீதியில் பேரவையினால் சில நாடுகளுக்கு இதனை வலியுறுத்த முடியும்.
ஆனால் இவ்வாறான தடை விதிக்கப்பட வேண்டுமாயின்இ ஜக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிலேயே இதுதொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்ட பல நாடுகள் உண்டு. அவை எமக்கு ஆதரவு வழங்கும் என்று அமைச்சர் கூறினார்.