Thursday, January 20, 2022

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
குருநாகலை கிரிபாவ பிரதேசத்தில் நேற்று (06) நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளிவந்துள்ளது. சில அரசியல்வாதிகள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி எம்மீது சுமத்தி இலாபம் பெற முயற்சிக்கின்றனர். ஆணைக்குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் இதில் யாருக்கு பொறுப்பு உள்ளதென்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 2015ஆண்டு முதல் அரசாங்காத்தினால் நாட்டின் பாதுகாப்பு முன்னுரிமை வழங்கவில்லை. செயற்திறனற்ற ஆட்சியினால் தான் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த மிலேச்சத்தனமான சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டுமன்றி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். தாங்கள் அன்றைய அரசாங்கத்தில் இல்லாதவர்கள் போல் சிலர் தற்போது பேசுகின்றனர். இந்த சம்பவத்துக்கு எமது அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டுமென்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பு. அதனை நிச்சயமாக செய்வோம். நாம் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles