இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் இலங்கைக்கு குந்தகம் விளைவிக்கும் என ஐ.நாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சி.ஏ.சந்திரபிரேமா கருத்துரைத்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் நேற்று இலங்கை சார்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நேற்றைய வாக்கெடுப்பின் போது இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்தன. 14 நாடுகள் நடுநிலையாக இருந்தன.
பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. இந்தியா நடுநிலையாக இருந்தது.
குறித்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பிலிப்பைன்ஸானது, இலங்கைக்கு எதிரான குறித்த பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழர்களின் பிரச்சினையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்தது.
அத்துடன் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும்இ இறையாண்மையையும் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளது.