Monday, July 4, 2022

ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 997 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 23-ஆம் திகதி 969 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதே நாட்டில் இதுவரை பதிவான அதிகூடிய தொற்று நோயாளர் தொகையாக பதிவாகியிருந்த நிலையில் நேற்று ஆயிரத்தை நெருங்கிய தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
புதிய தொற்று நோயாளர்களுடன் இதுவரையில் இலங்கையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்று நோயாளர் தொகை 102,376 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்றிரவு மேலும் 3 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. இவற்றுடன் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 647 ஆக உயர்ந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles