Thursday, January 20, 2022

கபொத சாதாரண பரீட்சை நாளை

கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சை நாளைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
மார்ச் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெற உள்ளன.
இம்முறை 622,300 மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையில் தோற்ற உள்ளதுடன் 4,513 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
மேற்படி மாணவர்களில் 423,746 பேர் அரசாங்க பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்துவடன் 298,746 பேர் தனியார் பாடசாலை மாணவர்களாகும்.
இதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த சாதாரண பரீட்சை கொவிட் 19 தாக்கத்தினால் திகதி மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே, மாணவர்களுக்கு கொவிட் 19 ஏற்பட்டால் அவர்கள் பரீட்சை எழுதுவதற்கான பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles