கொரேனாவினால் மரணிக்கும் உடல்களை முல்லைத்தீவு – இரணைதீவில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் எங்கே உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பாக நேற்றைய தினம் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனடிப்படையில் கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை இரணைத்தீவில் நல்லடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டதுடன் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இரணைத்தீவு ஒரு தீவாகும். விஞ்ஞான ரீதியில் சுகாதார பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய இந்தத் தீவில் நல்லடக்கம் செய்ய முடியுமாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here