Friday, January 28, 2022

கொழும்பில் மேம்பால ரயில் சேவை விரைவில்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில்

கொழும்பின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தூண்களினாலான மேம்பால பாதைகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நான்கு வழிகளில் நிர்மாணிக்கப்படும் இப் பாதையானது ரக்தா (சிவப்பு), ஹரித (பச்சை), நீல (நீலம்) மற்றும் தம் (ஊதா) ஆகிய நிற அடையாளங்களைக் கொண்டு ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
ரக்தா ரயில் பாதையானது 42கிலோமீற்றர் தூரத்தைக் கொண்டது. இப்பாதை ராகமையில் இருந்து பிட்டகோட்டை ஊடாக கொட்டாவை வரை நிர்மாணிக்கப்பட உள்ளது.
ஹரித ரயில் பாதை 28 கிலோமீற்றர் தூரம் கொண்டதுடன் மொறட்டுவையில் இருந்து நாரஹேன்பிட்ட ஊடாக களனி வரையான பாதையாகும்.
கொட்டாவையில் இருந்து இசுருபாய, பத்தரமுல்லை ஊடாக ஹனுபிட்டிய வரையான நீல ரயில் பாதையானது 23 கிலோமீற்றர் கொண்ட பாதையாக நிர்மாணிக்கப்பட உள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் இருந்து பொரளை ஊடாக அத்துருகிரிய வரையான தஹம் ரயில் பாதையொன்றும் நிர்மாணிக்கப்பட உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles