கொழும்பு மேற்கு முனையம் அதானி குழுமத்துக்கு

0
82

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்திக்கு முதலீட்டாளரை தெரிவு செய்யுமாறு ஜப்பான் அரசாங்கத்து வழங்கிய கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை.


இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் ஜப்பான் தூதரகம் ஆகியவற்றுக்கு நிர்மாணம், செயற்படுத்தல் வர்த்தகம் (BOT) ஒப்பந்தம் மற்றும் திட்டம் தொடர்பாக முதலீட்டாளர்களை தெரிவு செய்யுமாறு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அதானி போட்ஸ் மற்றும் ஸ்பெசல் எகோனமிக்ஸ் சோன் லிமிட்டெட் நிறுவனத்தினால் முன்வைத்த திட்டத்திற்கு இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் அனுமதி வழங்கியது.


இதனடிப்படையில் அரச – தனியார் செயற்திட்டமாக கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் இந்தியாவின் அதானி நிறுவனமும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.


35 வருடங்கள் அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்க உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here