Thursday, January 20, 2022

கோடீஸ்வர தம்பதிகளை ஏற்றிச்சென்ற ரயில் ஹட்டனில் தொழில்நுட்ப கோளாறு

ரஷ்ய தம்பதிகளை ஏற்றிச் சென்ற நீராவி ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹட்டனில் இடைநிறுத்தப்பட்டது.
வைஸ்ரோய் என்றழைக்கப்படும் இந்த நீராவி ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா (10) நோக்கி பயணித்தது.
குறித்த வண்டி ஹட்டனில் வைத்து தொழில்நுட்ப கோளாறினால் இடைநிறுத்தப்பட்டதுடன் சுமார் ஹட்டனில் இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்தே பயணித்தது. இதனால்இ ரயிலில் பயணித்த ரஷ்யாவின் கோடீஸ்வரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் கோடீஸ்வர தம்பதியினர் உட்பட 8 பேர் இந்த ரயிலில் பயணித்ததுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நானுஓயா செல்வதற்காக முன் ஒதுக்கீடு செய்து பணத்தையும் செலுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles