நாளாந்தம் வாகன விபத்துக்களினால் ஏற்படும் மரணம் மற்றும் ஊனமுறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மாணவர்களை தெளிவுபடுத்தும் “வீதிப் பாதுகாப்பு வலயம்” தொடர்பான தேசிய வேலைத்திட்டம் இன்று (24) கெஸ்பேவ தர்மசேன ஆட்டிகல மகளிர் வித்தியாலயத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.