புத்தாண்டு விடுமுறைக் காலப்பகுதியில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
குறிப்பாக உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகள் ஊடாகவே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இவற்றின் தரம் மற்றும் குறைபாடுகளை கண்டறியும் வகையிலான பரிசோதனைகள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுகின்றமை புள்ளி விபரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக 8,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்கு மேலதிகமாக சிவில் உடையில் பொலிஸாரை ஈடுபடுத்த உள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் விசேட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.