Thursday, January 20, 2022

சிங்கள மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

நாட்டில் இன, மத, குல வேறுபாடின்றி பயணிக்க வேண்டுமென்றும் 80வீத மொழி பேசும் மக்களின் சிங்கள மொழியை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையென்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
மொழியை பயன்படுத்துவதில் உள்ள வேற்றுமை காரணமாக வெறுப்பு பேச்சுகளும், இனவாதக் கருத்துக்களும் தலைத்தோங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், சிங்கள ஊடகவயிலாளர்கள் தமிழ் மொழியையும், தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதென்றும் கூறினார்.
ஈழத்து நூன் அல்ஹாஜ் எம்.ஏ.எம். நிலாமின் 75 ஆண்டு பிறந்ததினம் மற்றும் தட்டுத் தாவாரம் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (20) மினுவாங்கொடையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்கள் அண்மைக் காலமாக பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். மொழி வேறுபாட்டின் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகங்களிடையே தோன்றுகின்றது.
ஊடகவியலாளர்கள் சகல மொழிகளிலும் பரீட்சயம் பெற வேண்டிய தேவை உள்ளது. 80 வீதமான சிங்கள மொழி பேசும் மக்கள் வாழும் இந்நாட்டில் சிங்கள மொழியை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கான வேலைத்திட்டங்களை சகல பிரதேச மட்டங்களில் ஆரம்பிக்க வேண்டும். இதனூடாகவே பெரும்பான்மை மக்கள் மத்தியில் காணப்படும் பிழையான கருத்துக்கள் களையப்படும். தமிழ் மொழியில் இடம்பெறும் பிரதான தலைப்புச் செய்திகள் சிங்கள மொழியில் வேறு விதமாகவும் சிங்கள மொழி தலைப்புச் செய்தி தமிழ் மொழியில் வேறு விதமாகவும் பிரசுரிக்கப்படுகின்றன.
ஆகவே மொழியை சரியாக பயன்படுத்தி இனங்களிடையே ஏற்பட்டுள்ள விரிசலை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles