மதவாச்சியில் இருந்து தலை மன்னாருக்குச் சென்ற ரயிலுடன் தனியார் பஸ் மோதுண்டதில் பலர் காயமடைந்துள்ளதுடன் ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று நண்பகல் இந்தச் சம்வம் தலைமன்னார் பியரில் இடம் பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மன்னார் நோக்கி வந்த பயனிகள் பஸ் வண்டி மதவாச்சியில் இருந்து தலை மன்னார் பியர் நோக்கிச் சென்ற இரயிலுடனேயே மோதுண்டது.
இதன்போது 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் சிலர் ஆபத்தான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். செய்தி கிடைத்த நேரத்தில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13வயதுடைய மாணவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் இரண்டு மாணவர்கள் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்தை கேள்வியுற்றதும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என பெருமளவானர்கள் மன்னார் பொது வைத்தியசாலையை சூழ்ந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை காயப்பட்டவர்களுக்கு உடநடியாக இரத்தம் தேவையாகவுள்ளதால் விரும்புபவர்கள் உடநடியாக வைத்தியசாலைக்கு வந்து இரத்தம் வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here