Thursday, June 30, 2022

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கொட்டாவ வெளியேறல் பகுதி மூடப்பட்டது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதி (Exit point) இன்று (28) காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது.

மேற்படி வெளியேறும் பகுதியில் பணியாற்றிவரும் ஊழியர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனினும்இ பேருந்து மற்றும் அம்பியூலன்ஸ்களுக்காக கொட்டாவ வெளியேறல் பகுதி திறக்கப்படும். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் அத்துருகிரிய மற்றும் கஹதுடுவ வெளியேறல் பகுதிகள் ஊடாக பயணிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை கொட்டாவ நுழைவாயில் (Entry point) வழியாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்க முடியும். எனினும் பற்றுச்சீட்டு வழங்கப்படமாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles