Thursday, June 30, 2022

”தேங்காய் எண்ணெயில் எப்லடொக்சின் புற்றுநோய் காரணி”

உடனடியாக மீள்ஏற்றுமதி செய்யவும்

13 கொள்களன்களின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் எப்லடொக்சின் என்ற புற்றுநோய்’காரணி அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவற்றை உடனடியாக மீள்ஏற்றுமதி செய்ய வேண்டுமென சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.வி. ரவிப்பிரிய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மூன்று நிறுவனங்களினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தேங்காய் எண்ணெயில் எப்லடொக்சின் புற்றுநோய் காரணி இருப்பது பரிசோதனையின் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுமார் 183,000 கிலோகிராம் தேங்காய் எண்ணெய் சுங்கத்திணைக்களத்தினால் சில நாட்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்டது.
எதிரிசிங்க எடிபில் ஒயில்ஸ், அலி பிரதர்ஸ் பிரைவேட் லிமிடட், கட்டான ரிபைனரிஸ் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்திருந்தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles