நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் தட்டுப்பாட்டை காரணம் கூறி பாம் ஒயில் தடையை நீக்குவதற்கு பிரதான நிறுவனம் ஒன்று செயற்பட்டு வருவதாக அறிய முடிகிறது.
பாம் ஒயில் இறக்குமதியின் ஊடாக எண்ணெய் பற்றாக்குறைக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியுமென்ற மாயையை சமூக மட்டத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது.
பாம் ஒயில் மனித உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தொனிப்பொருளில் முன்னணி ஆய்வாளர்களை கொண்டு இதற்கான ஊடக அறிக்கைகளை தயார்படுத்தி வருகின்றனர். இந்த செயற்பாட்டுக்காக பாரிய நிதி செலவிடப்பட்டு போலிப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
பாம் ஒயில் நுகர்வானது நாட்டில் அதிகரித்துள்ள புற்றுநோய்க்கு பிரதான காரணியாக அமைந்துள்ளதுடன் இதனை உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், பிஸ்கட் மற்றும் இனிப்பு பண்டங்களுக்கு பாம் ஒயில் உள்ளீடு தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் மேற்படி பண்டங்களை படிப்படியாக நுகர்வில் இருந்து தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.