புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்தார்.
நாட்டரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ ரூ.93க்கும் விற்கப்படும். இதற்காக அனைத்து சுப்பர் மார்க்கெட்களிலும் அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் 4,000இற்கும் அதிகமான சுப்பர் மார்க்கெட்டுகள், “2,500 உள்ளூர் கூட்டுறவு நிறுவனங்கள் 454 சதொச நிறுவனங்களில் இந்த விலை அமுலாகும்.