பங்களாதேஷிடம் கடன் கேட்கும் அளவுக்கு நாம் எமது பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளதாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷுக்கு விஜயம் செய்த பிரதமர் அந்த நாட்டிடம் டொலர்களை கடனாக கோரியிருக்கின்றார். சீனாவிடம் தேவையானளவு டொலர் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கும் அரசாங்கம் பங்களாதேஷிடம் கடன் கேட்பது அரசாங்கம் கேட்கும் தொகையை சீனா தர மறுப்பக்கின்றதா என கேட்கின்றோம்.
அரசாங்கம் 32 டொலர் பில்லியன்களை வருமானமாக பெறுவதாக இருந்தால் பிரதமர் ஏன் பங்களாதேஷிடம் கடன் கேட்கவேண்டும்.
நாட்டின் பிரதமர் செல்லும் நாடுகளில் எல்லாம் இவ்வாறு கடன் கேட்கும்போது எமது நாடு வங்குராேத்தான நாடு என்றே முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்களாதேஷிடமிருந்து கடன் கேட்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டிருப்பது குறித்து முழு நாட்டு மக்களும் வெட்கப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் முறையான நிதிக்கொள்கை இல்லாமையால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும் அதன் காரணமாகவே பங்களாதேஷிடம் கடன் கேட்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.