நுவரெலியா – ஹக்கல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஆட்டோ ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில், மூன்று பெண்கள் பலியாகினர். இன்று காலை (01) எல்ல பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோ, எதிர் திசையில் வந்த கனரக லொரியொன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 51,52, 20 வயதுகளுடைய மூன்று பெண்களே பலியானவர்களாவார். விபத்தில் காயமடைந்த நபரொருவர் நுவரெலியா அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.