Monday, July 4, 2022

பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி நௌபர் மெளலவி என அடையாளம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி, நௌபர் மெளலவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் (06) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக நெளபர் மௌலவி என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் ஹஜ்ஜுல் அக்பர் என்பவரும் இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles