Thursday, January 20, 2022

புர்கா தடைக்கு அவசரமில்லை

முகத்தை முழுமையாக மூடும் புர்காவை தடை செய்ய அவசரப்படத் தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (16) தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, புர்கா தடை தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டதாகக் தெரிவித்த விடயம் தொடர்பாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
புர்கா தடை தொடர்பாக பரந்த அடிப்படையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் இதற்கு சிறிது காலம் ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் புர்கா தொடர்பாக அமைச்சரவையில் பேசப்படவில்லை என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles