Tuesday, January 25, 2022

பொறுப்புகளை மறந்து செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஆடை அணிந்தா தேர்தலில் களமிறங்க முயற்சிக்கிறார்?

பயங்கரவாத தாக்குதல் நடக்குமென்ற தகவல் கிடைத்த போதும் தனது பொறுப்புகளை புறக்கணித்து வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி, மீண்டுமொறு தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை எவ்வாறு செய்ய முடியுமென கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் இன்று (04) கேள்வி எழுப்பினார்.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான சட்ட நடவடிக்கை தாமதப்படுத்தக்கூடாது என்றும் கார்டினல் கூறினார்.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் அறிக்கை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துறைகள் ஏன் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றன என்று கேள்வி எழுப்பியதாகவும், தேசத்துரோகத்தை நாடாமல் பரிந்துரைகளை விரைவாக செயல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் கார்டினல் கூறினார்.
கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், சஹாரனைக் கையாண்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பது வெட்கக்கேடானது என்று கூறினார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நாட்டின் பல்வேறு ஆலயங்களுக்கும் விஜயம் செய்த கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles