மன்னர் சல்மானின் உத்தரவினால் கசோக்கி படுகொலை

0
78

அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

சவுதியின் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உத்தரவின் பேரிலேய வொசிங்டன் போஸ்ட் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி, சவுதி அரேபியாவின், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சனம் செய்து பத்திரிகையில் கட்டுரை எழுதி வந்தார்.
2018ஆம் ஆண்டு துருக்கிப் பெண் ஒருவரை திருமணம் செய்ய கசோக்கி முடிவு செய்து இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் ஆணவனங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றார். எனினும் அவர் தூதுவராலயத்தில் இருந்து திரும்பி வரவில்லை.
மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். பின்னர் உடல் பாகங்களை ஆசிட்டைக் ஊற்றி அழித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த படுகொலையை சவுதி அரசாங்கம் ஆரம்பத்தில் மறுத்த போதும் பின்னர் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (27) அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தக் கொலை தொடர்பான அறிக்கையை அமெரிக்க புலனாய்வு திணைக்களம் ஒப்படைத்துள்ளதுடன் இதன் பின்னணியில் சவுதி இளவரசர் வழங்கிய உத்தரவின் பேரிலேயே ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here