வாகன விபத்துக்கள் காரணமாக கடந்த 72 மணிநேரத்தில் மாத்திரம் 40பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 16ஆம் திகதி மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அவ்வாறே, 14ஆம் திகதி 14 மரணங்களும் 15ஆம் திகதி 16 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்துவதன் மூலமே இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.