Thursday, January 20, 2022

மேல்மாகாண பாடசாலைகள் ; சகல வகுப்புகளும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ஆரம்பம்

மேல்மாகாண பாடசாலைகள் தரம் 5,11,13 தவிர ஏனைய மாணவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னரே திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (9) தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5,11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்காக மாத்திரமே பாடசாகைள் திறக்கப்படும் எனவும் அனைத்து தரங்களுக்குமான வகுப்புகள் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில் “இன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துபூர்வ பரிந்துரையைப் பெற்றுள்ளோம். அதன்படி மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மார்ச் 15 திங்களன்று தரம் 5 11 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு மட்டுமே மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. ஏனைய தரங்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் விடுமுறைக்குப் பிறகு தொடங்கப்படும். அதாவது ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும்” என்றார்.
தரம் 1 வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும் அதற்குரிய மாணவர்கள் ஏற்கனவே பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
தரம் 1 உட்பட மற்ற அனைத்து தர வகுப்புகளும் ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மீள ஆரம்பமாகும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles