மேல்மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் அனைத்து தரங்களுக்கான வகுப்புகளை திங்கள் முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் சகல தரங்களுக்குமான வகுப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் ஆரம்பிக்க அனுமதி வழங்கியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தரம் 13,11,5 ஆகிய வகுப்புகள் மாத்திரமே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் ஏனைய தரங்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.