Thursday, January 20, 2022

அதிக யானைகளை கொன்ற நாடுகளின் பட்டியிலில் இலங்கை முதலிடம்

மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான முரண்பாட்டினால் உலகளாவிய ரீதியில் அதிகளவில் யானைகள் கொல்லப்பட்ட நாடாக இலங்கை காணப்படுவதாக அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோபா) அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

அவ்வாறே, யானைத் தாக்குதலினால் மரணமானவர்களின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் காணப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழமையாக மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான பிரச்சினையால் வருடாந்தம் 272 யானைகள் உயிரிழப்பதுடன் 2019ஆம் ஆண்டில் மாத்திரம் 407 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, யானைத் தாக்குதலினால் வருடாந்தம் 85 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டில் மாத்திரம் 122 நபர்கள் இத்தாக்குதலினால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles