Tuesday, January 25, 2022

யாழ். பல்கலைக்கழக 35 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்றுக் காலை ஆரம்பமானது.

(24)நேற்றும் (25)இன்றும் 06 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில் யாழ்.பல்கலைக்கழகவேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமை தாங்கி பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் பதிவாளர் வி. காண்டீபன் நிதியாளர் எஸ்.சுரேஷ்குமார் நூலகர் சி. கல்பனா மற்றும் பீடாதிபதிகள் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கொவிட் 19 நிலைமைகளைக் கருத்திற் கொண்டு சுகாதார நடைமுறைகளுடன் இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றமை விசேட அம்சமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles