Monday, July 4, 2022

ரஞ்சனின் வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளதாக சபாநாயகர் இன்று (7) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இவரது வெற்றிடத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மன்னப்பெரும நியமிக்கப்பட உள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் 47,212 வாக்குகளைப் பெற்று 5ம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞசன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என நாடாளுமன்ற செயலாளர்நாயகம் தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே ரஞசன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles