Tuesday, January 25, 2022

நீர் மின்நிலைய ஊழியர்கள் 10 பேருக்கு கொவிட்

லக்ஷபான நீர் மின் நிலையத்தில் கடமையாற்றும் 10 ஊழியர்கள் கொவிட் தொற்றுக்கு இழக்காகியுள்ளதாக அம்பகமுவ சுகாதார நிலையம் தெரிவித்தது.
மின் நிலையத்தில் கடமையாற்றும் 3 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் நிலையத்தில் உள்ளவர்களுக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 7 பேருக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
மேற்படி 10 பேருடன் நேரடி தொடர்பபை பேணிய ஊழியர்கள்140 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு அவர்கள் அனைவரையும் லக்ஷபான நீர் மின்நிலைய கட்டிடடத்தில் அமைந்துள்ள ஊழியர் வீடமைப்புத்திட்டத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லக்ஷபான நீர் மின்நிலைய உத்தியோகத்தர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles