Tuesday, January 25, 2022

9 மாகாணங்களிலும் நல்லடக்கம் செய்யப்படும்

நல்லடக்கம் செய்வதற்கான சரியான இடங்களை தெரிவு செய்து தருமாறு மாகாண, மாவட்ட செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம்,
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த ஒரு வாரகாலத்தை செலவழிக்க வேண்டியேற்பட்டது. சிலர் என்னிடம் இரணைத்தீவிலா நல்லடக்கம் செய்யப்படும், ஓட்டமாவடியிலான என்று வினவுகின்றனர். முதற்கட்ட தீர்வாக இரணைத்தீவை நாம் தெரிவு செய்தோம். எவ்வாறாயினும் தற்போது ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக சகல மாகாணத்திலும் உள்ள மாவட்ட செயலாளர்கள் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும் நாம் அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த மாகாணத்தில் உரிய இடங்களை தெரிவு செய்து தருமாறு. அவ்வாறு தெரிவு செய்யப்படும் இடங்களில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் வரை ஓட்டமாவடியில் 31 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, இறுதிக்கிரியைகள் செய்யப்படாத ஏனைய ஜனாஸாக்கள் அனைத்தையும் இன்னும் இரண்டு நாட்களில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நேற்றைய தினம் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவானதுடன் இதுவரை மொத்தமாக 502 பேர் கொரோனாவினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles